Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

சசிகலாவா... அஜித் குமாரா? ஆருடம் கூறும் மலையாள மனோரமா! Ajith ADMK Newsசசிகலாவா... அஜித் குமாரா? ஆருடம் கூறும் மலையாள மனோரமா!
ஏற்கெனவே தமிழகத்தில் நடிகர்கள் பலர் அரசியல் கட்சி கண்டு வெற்றியும் பெற்றிருக்கின்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு உதாரணம் எம்ஜிஆர். தோல்வியுற்றவர்களுக்கு நடிகர் சிவாஜி கணேசனை உதாரணமாக கூறலாம். இந்த இருவருக்கும் பிறகு தமிழ் திரையுலகில் கோலோச்சியவர்கள் நடிகர் ரஜினியும் கமலும்.

இதில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் ஒத்துவராது என வெளிப்படையாகவே கூறி ஒதுங்கி விட்டவர். நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுக்க பல அரசியல் கட்சிகள் இன்று வரை முயன்று வருகின்றன. ஆனால், ரஜினிகாந்த் அதில் இருந்து தப்பித்தே வந்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் அதிகபட்ச அரசியல் பிரவேசம் கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் நடந்ததுதான். அதற்கு முன்னதாக 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார். முதன்முறையாக அரியணை ஏறிய ஜெயலலிதா செய்த நிர்வாகரீதியிலானத் தவறுகள் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு, வளர்ப்பு மகனின் பிரமாண்டமானத் திருமணமும் மக்கள் மனதில் ஜெயலலிதாவின் ஆட்சி மீது கடும் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி கண்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூப்பனார் தனிக்கட்சி கண்டார். அந்த கட்சியின் பெயர் தமிழ் மாநில காங்கிரஸ். அப்போது சோ உள்ளிட்டவர்கள் கூட ஜெயலலிதாவுக்கு எதிராகத் திரும்பினர். அந்த சமயத்தில்தான் ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி வாய்ஸ் கொடுத்தார். ' ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது ' என தொலைக்காட்சிகளில் தோன்றி ரஜினிகாந்த் பேசினார். திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி பலம் மக்களின் கோபம், வெறுப்பு காரணமாக அந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியைத் தழுவியது. அதற்கு பிறகு ரஜினிகாந்த் அரசியலில் எந்த வாய்சையும் யாருக்கும் கொடுக்கவில்லை. தற்போது வரை பாரதிய ஜனதா கட்சி அவரை அரசியலுக்கு இழுக்க முயற்சித்து வருகிறது.
இன்று தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்தும் விஜய்யும் முன்னணி நடிகர்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைவது போல அவ்வப்போது பேச்சு அடிபடும். ஆனால், இதுவரை வெளிப்படையாக எந்த அரசியல் கட்சிக்கும் நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்தது இல்லை. அதே வேளையில் தனிக்கட்சி தோற்றுவிக்கும் நோக்கம் அவருக்கு இருக்கலாம். அதனால்தான், தனது ரசிகர்களை ஒருங்கிணைத்து தனி அமைப்பு கண்டு, அதன் மூலம் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை விஜய் செய்தும் வருகிறார்.
ஆனால்,நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வருவது போல எந்த பிம்பத்தையும் உருவாக்கிக் கொண்டது இல்லை. தான் உண்டு தனது நடிப்பு உண்டு என்று இருப்பவர். ஒரு முறை, விழா ஒன்றில் முதல்வராக இருந்த கருணாநிதி பங்கேற்றார். அந்த விழாவின்போது நடிகர் அஜித்குமார் பேசுகையில், 'நடிகர்களை விழாக்களில் பங்கேற்க கட்டாயப்படுத்துகிறார்கள் 'என்று வெளிப்படையாக பேசினார். நடிகர் அஜித் இப்படி பேசியதும், ரஜினிகாந்தே எழுந்து நின்று கைதட்டி அதனை வரவேற்றார். அந்த சமயத்தில் நடிகர் அஜித்தின் துணிச்சலான பேச்சு பாராட்டைப் பெற்றது. அதற்குப் பிறகு, எந்த அரசியல் மூவ்மென்டும் அவரிடம் இருந்ததில்லை.
இந்த நிலையில்தான் மலையாள பத்திரிகையான மலையாள மனோரமா தனது ஆங்கில இணையதளத்தில், அதிமுகவின் அடுத்த சாய்ஸ்  நடிகர் அஜித்குமார்தான் என  செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து மலையாள மனோராமாவில் கூறப்பட்டிருப்பதாவது, ''தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது நடிகர் அஜித்குமார், பல்கேரிய நாட்டில் படப்பிடிப்பில் இருந்தார். உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். பின்னர் அதிகாலை 4 மணியளவில் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் முதல்வர் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் கடைசி வரை நட்புறவுடன் இருந்தவர் நடிகர் அஜித் என மலையாள மனோரமா தனது செய்தியில் கூறியுள்ளது.
இனிமேல் அதிமுகவை சசிகலா அல்லது நடிகர் அஜித்குமார்தான் வழி நடத்துவார்கள் என தெரிவித்துள்ள மனோரமா, தங்களால், இந்த செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips