Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

பரங்கிக்காய் அடை white pumpkin adai in tamil poosanikai adai

பரங்கிக்காய் அடை
தேவையான பொருட்கள் :
Ø  புழுங்கலரிசி – 1 கப்
Ø  உளுத்தம்பருப்பு – அரை கப்
Ø  துவரம்பருப்பு – முக்கால் கப்
Ø  பாசிப்பருப்பு – கால் கப்
Ø  காய்ந்த மிளகாய் - 10
Ø  சின்ன வெங்காயம் – 6
Ø  மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – கால் கப்
Ø  பிஞ்சு பரங்கிக்காய் – 1 துண்டு
Ø  சோம்பு – அரை டீஸ்பூன்
Ø  பெருங்காயம் – 1 சிட்டிகை
Ø  உப்பு - தேவையான அளவு
Ø  எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
Ø  பரங்கிக்காயை தோல் சீவி துருவிக்கொள்ளவும்
Ø  அரிசியைத் தனியாகவும் பருப்புகளைத் தனித்தனியாகவும் ஊற வைக்கவும்
Ø  மிளகாயை தண்ணீரில் ஊற வைக்கவும்
Ø  2 மணி நேரம் கழித்து சோம்பு மிளகாய் உப்பு வெங்காயம் மற்றும் பெருங்காயத்தை விழுதாக அரைத்தெடுக்கவும்.
Ø  மிச்ஸியில் முதலில் உளுத்தம்பருப்பை போட்டு சற்று பெருபெருவெனவும் பின்னர் அரிசியையும் அதே மாதிரி அரைத்தெடுக்கவும்.
Ø  பாசிப்பருப்பை ஒரு சில விநாடிகள் மட்டும் அரைக்கவும்.
Ø  துவரம்பருப்பையும் ஒன்றிரண்டாக அரைத்தெடுத்து அனைத்தையும் அரைத்த மிளகாய் விழுதுடன் ஒன்றாக கலந்து அதில் மல்லித்தழையக் கலக்கவும்.

Ø  பின்னர் தோசைக்கல்லை சூடு செய்து இந்த மாவை மெல்லிய அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு அடையின் மேல் துருவிய பரங்கிக்காயைத் தூவி கரண்டியால் அழுத்திவிட்டு பின் அடையை திருப்பிவிட்டு எண்ணெய் ஊற்றி, நன்கு மொறுமொறுவென வெந்ததும் எடுக்கவும். (ஈரப்பதம் இருக்கும்போதெ பரங்கிக்காய் துருவலைத் தூவ வேண்டும்).

மேலும் படிக்க... Read More...

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips