Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

கேழ்வரகு முறுக்கு Raagi murukku in tamil



ராகி முறுக்கு...!
யாரும் கலரை பார்த்து பயப்பட வேண்டாம்... டேஸ்ட் சூப்பரா இருக்கும்.. குறைந்த செலவில் எளிமையான முறையில் செய்யலாம்.. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.. செஞ்சுதான் பாருங்களேன்......
தேவையான பொருட்கள்:
·         ராகி மாவு - 3 கிண்ணம்
·         அரிசி மாவு - 2 கிண்ணம்
·         உளுந்து மாவு - 1 கிண்ணம்
·         பெருங்காயம் பொடி – சிட்டிகை
·         எள் - 1 டீஸ்பூன்
·         வெண்ணெய் - 1 டீஸ்பூன்
·         உப்பு - தேவையான அளவு
·         தண்ணீர் - தேவையான அளவு
·         எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
* உளுந்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
* அதனுடன் அரிசி மாவு, ராகி மாவு, உப்பு, எள், காயம், வெண்ணெய் கலந்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
* தேன்குழல் (முறுக்கு) அச்சில் மாவை போட்டு, மிதமான சூட்டில் உள்ள எண்ணையில் பிழிந்து, பொறித்து எடுக்கவும்.
* (சத்தம் அடங்கியதும் எடுத்து விட வேண்டும்... ராகி நிறத்தில் பொன்னிறம் எல்லாம் கண்டுபிடிக்க முடியாது.)

மேலும் படிக்க... Read More...


No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips