Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

ஆப்பம் செய்முறை தமிழில் - Aappam Seimurai in tamil - Thengai paal aappam

ஆப்பம்
தேவையான பொருட்கள் :
Ø  பச்சரிசி – 1 கப்
Ø  புழுங்கலரிசி – 1 கப்
Ø  உளுத்தம்பருப்பு – கால் கப்
Ø  வெந்தயம் – 1 டீஸ்பூன்
Ø  ஜவ்வரிசி – 3 டீஸ்பூன்
Ø  தேங்காய் (துருவியது) – 1 மூடி
Ø  சா்க்கரை – அரை கப்
Ø  உப்பு - தேவையான அளவு
Ø  எண்ணெய் கல்லில் தடவ தேவையான அளவு

செய்முறை :
Ø  அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து ஆட்டி, உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் ஜவ்வரிசியில் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, ஜவ்வரிசி வேகும் வரை காய்ச்சி, ஆறியதும் மாவுடன் கலந்து வைக்கவும் ( 12 மணி நேரம்). காலையில் நன்கு மாவை கலக்கி விடவும்.
Ø  தேங்காயைத் துருவி, மிக்ஸியில் போட்டு, முதலில் கெட்டிப்பால், பிறகு தண்ணீர்பால் என மொத்தம் இரண்டரை டம்ளர் எடுக்கவும்.
Ø  சர்க்கரை சேர்த்து அதைக் கலந்துகொள்ளவும்.
Ø  தோசைக்கல்லில் ஒரு சிறிய துணி கொண்டு, எண்ணெயைத் தொட்டு தடவி பின்னர் ஆப்ப மாவை எடுத்து ஆப்பமாக ஊற்றி எடுத்து, அதில் தேங்காய்ப்பாலை விட்டு பரிமாறவும்.
குறிப்பு :
Ø  ஜவ்வரிசி காய்ச்சி ஊற்றுவதற்கு பதில், 1 கைப்பிடி பச்சரிசி சாதம் போட்டும் மாவுடன் ஆட்டலாம்.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips