Follow by Email
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
Tamil Health food for Strong Body சோளம் நூடுல்ஸ் in tamil
Siruthaniya Sola Unavu:
- பனியோ வெயிலோ... எந்தக் காலத்துக்கும் உகந்தவை சிறுதானியங்கள். நம் முன்னோர்கள் சிறுதானியங்களைப் பயன்படுத்தி சத்தான உணவு வகைகளை எளிய முறையில் சமைத்துச் சாப்பிட்டனர்.
- அதுதான் அவர்களின் நீடித்த வாழ் நாளுக்கும் ஆரோக்கியத்துக்கும் அச்சாணியாக இருந்தது. “இப்போது நேரமில்லை, சுவையிருக்காது என்று காரணங்களைச் சொல்லிக்கொண்டு பலரும் சிறுதானியங்களைப் புறக்கணிக்கின்றனர்.
- ஆனால் அவற்றில்தான் உடலுக்கு வலு சேர்க்கும் சத்துக்கள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன” என்று சொல்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி.
- அனைவரும் விரும்பும் வகையில் சிறுதானியங்களில் செய்யக் கூடிய புதிய உணவு வகைகளோடு சில ஆரோக்கிய உணவு வகைகளையும் சமைக்கக் கற்றுத்தருகிறார் இவர்.
என்னென்ன தேவை?
- சோள மாவு - கால் கிலோ
- காளான் - ஒரு கப்
- பொடியாக நறுக்கிய
- வெங்காயம் - ஒரு கப்
- துருவிய குடைமிளகாய் - 1
- மிளகுத் தூள், கரம் மசாலா - தலா ஒரு டீஸ்பூன்
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
- சோள மாவை வாணலியில் பச்சை வாசனை போகும்வரை, வறுத்து ஆறவையுங்கள்.
- பிறகு அதில் சூடான தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்துப் பிசையுங்கள்.
- பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து ஆவியில் வேக வையுங்கள்.
- காளானைப் பொடியாக நறுக்கி கரம் மாசாலா, உப்பு சேர்த்து வேகவையுங்கள்.
- வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கி, வேக வைத்த காளானைச் சேர்த்து வதக்குங்கள்.
- பிறகு நூடுல்ஸ், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, சுடச்சுட பரிமாறுங்கள்.
No comments:
Post a Comment