Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

Mudakathan keerai benefits in tamil (வாதக்கோளாறுகளை விரட்ட... முடக்கத்தான் சாப்பிடுங்க!)

முடக்கத்தான் சாப்பிடுங்க!

  • முடக்கத்தான் என்று அழைக்கப்படும் முடக்கற்றான் மூலிகையைமொடக்கத்தான் என்றும் சொல்வார்கள்.
  • கிராமங்களில் மட்டுமல்லாமல்நகர்ப்புறங்களிலும் தோட்டம் மற்றும் வேலியோரங்களில் தானாகவே வளரக்கூடிய இந்த முடக்கத்தான்கொடி வகையைச் சேர்ந்ததுநகரத்தில் கீரை விற்பவர்களிடம் இந்த முடக்கத்தான் கீரை கிடைக்கும். 
  • மூட்டுகளை முடக்கி வைக்கும் முடக்கு வாத நோயை விரட்டுவதால்இது முடக்கற்றான் (முடக்கு அறுத்தான்என்ற பெயரைக் கொண்டிருக்கிறது.
  • பொதுவாகவாதம்முடக்குவாதம்வாயுத்தொல்லை போன்றவற்றுக்கு இந்த முடக்கத்தான் நல்ல நிவாரணம் தரக்கூடியது.
  • ஒரு பிடி முடக்கத்தான் இலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டுகால் பங்காக சுண்டக்காய்ச்சி வடிகட்டிஒருவேளைக்கு 25 மில்லி வீதம் காலையும்மாலையும் சாப்பிட்டு வந்தால் வாதம்வாயுத்தொல்லை விலகும்பிரச்னையைப் பொறுத்து சில நாட்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்இப்படிச் சாப்பிடும்போது சிலருக்கு சில நேரங்களில் தாராளமாக மலம் போகலாம்பயப்படத் தேவையில்லை
  • அதிகமானால் எலுமிச்சை சாறு குடிக்கலாம்மலம் போவது நின்றுவிடும்இதேபோல் கைகால் மற்றும் முகம் போன்ற பகுதிகளில் வரக்கூடிய வாதக்கோளாறுகளுக்கு முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் குணம் கிடைக்கும்.
  • மேற்சொன்ன பிரச்னை உள்ளவர்கள் காலை உணவான தோசையுடன் இந்த முடக்கத்தானை சேர்த்துக்கொள்ளலாம்அதாவது தோசை மாவுடன்அரைத்து வைத்த முடக்கத்தான் கீரையை கலந்து தோசை வார்த்துச் சாப்பிடுவதால் குணம் கிடைக்கும்இதை அவ்வப்போது செய்து வரலாம்
  • வாதம்வாயுத்தொல்லை உள்ளவர்கள்தான் என்றில்லாமல் எல்லோருமே இந்த முடக்கத்தான் தோசையைச் சாப்பிடலாம்காரக்குழம்புசாம்பார்ரசம்சூப் என பலவிதங்களிலும் முடக்கத்தான் கீரையைச் சமைத்து உண்ணலாம்.
  • இன்றைய அவசர உலகில் ஏதேதோ உணவுகளை உண்பதால் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஏராளமாக உள்ளனர்இதற்காக என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் நிவாரணம் கிடைக்காத நிலையில்பக்கவிளைவுகளே ஏற்படுகின்றனஅவர்கள் முடக்கத்தான் ரசம் வைத்து அருந்துவதால்தாராளமாக மலம் போகும்
  • ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரையுடன்கால் ஸ்பூன் மிளகுஅரை ஸ்பூன் சீரகம்தக்காளி ஒன்றுவெள்ளைப்பூண்டு 5 பல் சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து பொறுக்கும் சூட்டில் அருந்தினால்மலச்சிக்கலுக்கு நிவாரணம் கிடைக்கும்குறிப்பாகஇரவு வேளையில் இதை செய்தால் காலையில் தாராளமாக மலம் போகும்.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips