Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

What are the medical benefits dry ginger and ginger (Inji or Enji) in tamil


 

சமையலறையில் மருத்துவப் பொருள் – இஞ்சி:

“சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை" என்பது பழமொழி இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி பங்கு உண்டு. உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்யவதோடு பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதால் அனைத்து வகையான சமையலிலும் இஞ்சி இடம்பிடித்துள்ளது. நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக அதிகம் உபயோகப்படக்கூடியது வகிக்கக்கூடியது இஞ்சி மற்றும் சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. உலர்ந்த இஞ்சியே சுக்கு எனப்படுகிறது.

வேதிப்பொருள்:

இத்தாவரத்தின் மருத்துவப் பயன்களுக்கு அடிப்படையாக இருப்பவை எளிதில் ஆவியாகும். எண்ணெய்கள் மற்றும் ஓலியோரெசின்களாகும். ஜின்சிபெரின், ஜின்ஜிரால் மற்றும் செயல்பாட்டு வேதிப்பொருள்களாக உள்ளன. பித்தம் தொடர்புடைய நோய்களுக்கு சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ' பேசில்லஸ்" பாக்டீரியா தோற்றுவிக்கும் வயிற்றுப்போக்கினைத் தடுக்கும் திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜீரணம், வயிற்று உப்புசம், குடல்வலி, ஆகியவற்றிர்கு மருந்தாக பயன்படுகிறது. காலைநோய் எனப்படும் தலைச்சுற்றல் - வாந்தி போக்கக்கூடியது.. கிருமிகளுக்கு எதிரானசெயல், வயிற்று நோய்கள், மற்றும் சிலவகை உணவு நச்சுத்தன்மையாக மாறுவதை தடுக்கும். இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.

 மாரடைப்பு, ஆஸ்துமா குணமாகும்:

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஒரு அவுன்ஸ் எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், மூச்சிரைப்பு (ஆஸ்துமா) குணமாகும்

 முகப்பொலிவிற்கு இஞ்சி - தேன்:

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் கட்டுப்படும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும்.

இஞ்சி முறபா
:

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து வரும் இரைப்பு போன்றவை குணமாகும்.

சர்க்கரை நோய்க்கு மருந்து:

இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும்.

வலி நிவாரணி
:

வாந்தியுடன் கூடிய மயக்கத்தை போக்குகிறது. பயணநோய், மற்றும் அறுவை சிகிச்சைக்குப்பின்னர் ஏற்படும் வாந்தி மயக்கத்திற்கு சிறந்த மருந்து. தசைவலி மற்றும் பல்வலி, முகத்தில்வலி ஆகியவற்றிர்கு காய்ந்த தரையடித் தண்டு ( சுக்கு) தண்ணீரில் இழைத்து பசையினை நெற்றியில் பற்று போட்டால் வலி குணமடையும்.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips